இன்றைய காலகட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் அப்படிப்பட்டவர்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளி வருவதற்கு உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் மேற்கொள்வதாலும் பிடித்த இடத்திற்கு செல்வதாலும் பிடித்த பாடல்களை கேட்பதாலும் மன அழுத்தம் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..
எதிர்காலம் பணி பொருளாதார போன்றவற்றை நினைத்து அளவுக்கு அதிகமாக பலர் பதற்றம் ஆகின்றனர் சின்ன விஷயம் கூட அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி இன்னலுக்கு உள்ளாக்குகிறது எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது கடினம் தான் ஆனால் அது முடியாத காரியம் இல்லை உங்கள் சுற்றுப்புறத்தை அமைதியாகவும் முடிந்தளவு மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள் அதுவே மன அழுத்தத்தை குறைக்க முதல் படி ஆகும், அதேபோல் மன அழுத்தம் குறைப்பதற்கு பயணங்களை மேற்கொள்ளுங்கள் பயணங்கள் மேற்கொள்வதால் மன அழுத்தம் குறைந்து தெளிவு பிறக்கும் அதே போல் பிடித்த பாடல்களை கேட்பதாலும் பிடித்தவர்களுடன் பேசுவதாலும் மன அழுத்தங்கள் மன இருகல்கள் குறைந்து மனம் ஆரோக்கியமாக மாறும்..!!



