
மன்மோகன் சிங் மறைவு..!! கிரிக்கெட் வீரர்கள் கருப்புப் பட்டையுடன் அஞ்சலி..!!
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்நிலையில், இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.