
டெல்லி கணேஷ் கடைசியாக குடும்பத்துடன் எடுத்த புகைப்படம்: தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர், வில்லன் என அனைத்திலும் புகுந்து விளையாடியவர் தான் நடிகர் டெல்லி கணேஷ்.
குறிப்பாக காமெடி நடிகர்களுடன் அவர் சேர்ந்து நடித்த காட்சிகள் இன்றும் கண்முன் வந்து செல்வது நிதர்சனம். கமலுடன் சேர்ந்து இவர் நடித்த நாயகன், அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்கள் பட்டிதொட்டி ஹிட் அடித்தது.
அதுமட்டுமின்றி தளபதி விஜய் நடித்த தமிழன் படத்தில் தனக்கு ஜூனியராக சேரும் விஜயிடம் ”எனக்கு டிசிப்ளின், டிசிப்ளின் தான் முக்கியம்” என டெல்லி கணேஷ் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் எப்போதும் குபீர் சிரிப்பை வரவழைக்கும். இப்படி நம்மை சிரிக்க வாய்த்த டெல்லி கணேஷ் நேற்று தூக்கத்தில் காலமானார். அவரின் இழப்பை தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் டெல்லி கணேஷ் தனது குடும்பத்துடன் எடுத்த போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் அவருக்கு 80 வயது நிறைவடைந்த நிலையில் அதை அவருடைய வாரிசுகள் கொண்டாடிய புகைப்படங்கள் தான் அது. இவர் கடைசியாக கமல் நடித்த இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.