
மனிதர்கள் அனைவருக்கும் மழை காலத்தில் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. அதுவும் மழைக்காலங்களில் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் குழந்தைகளை மிகவும் பெருமளவில் பாதித்து விடுக்கின்றன. இதற்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே ஆகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் தான் எந்த விதமான நோயாக இருப்பினும் சுலபமாக நம்மை தாக்கி விடும். அத்தகைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அதற்கு தேவையான காய்கறிகள் , மூலிகை மருந்துகளை உட்கொள்ள வேண்டும் .
மேலும் மழைக்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மேலும் நோயிலிருந்து நம்மை காத்துகொள்ளுவும் , நம் முன்னோர்கள் பின்பற்றிய பாட்டி வைத்திய முறையே மிகவும் நன்மை தரக்கூடியவை. அதாவது மஞ்சள் , துளசி , அதிமதுரம் , வேம்பு , பூண்டு இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தூண்டும்.
எடுத்துக்காட்டாக :
மஞ்சள் – பாலில் தினமும் மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் நமக்கு அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .
வேம்பு – வேம்பு என்பது வேப்பிலை . மழை காலங்களில் சளி , இருமல் போன்ற நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க வேம்பு நீர் குடித்து வந்தால் சளி , இருமலில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.