கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பாலிவுட் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஒவ்வொரு படத்திலும் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரையும் மெய்சிலிர்க்க வைப்பார்.
குறிப்பாக அவரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நடிகையர் திலகம். இந்த படத்தில் நடிகை சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். அவ்வளவு கச்சிதமாக அந்த படத்திற்கு பக்காவாக பொருந்தும் வகையில் கீர்த்தி சுரேஷ் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. இந்நிலையில் கீர்த்தி மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
View this post on Instagram




