
மத்திய அரசு அடல் ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முதுமையில் மூத்த குடிமக்களுக்கு பணத்திற்கான தேவை அதிகமாகின்றது. அந்த தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த திட்டம் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் மாதத்திற்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியம் பெற வழிவகை உள்ளது. இந்தத் திட்டத்தில், முதலீட்டாளர் மாதத்திற்கு ரூ.42 முதல் அதிகபட்சம் ரூ.210 வரை எளிதாக முதலீடு செய்யலாம். இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு பலருக்கு இல்லை என்பதே நிதர்சனம்.