
மத்திய அரசு நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது மத்திய அரசின் பிரபல ஓய்வூதிய திட்டமான “பிரதான் மந்திரி ஷ்ரம் யோஜனா” திட்டம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, இத்திட்டத்தில் மாதம் ரூ. 55 செலுத்தினால், அவர்களது 60 வது வயதில் இருந்து மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ. 3,000 வழங்கப்படுகிறது.
மேலும், அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மக்களுக்களின் நலனுக்காக பிரதமர் மோடி அவர்களால் இத்திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். மேலும், இத்திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, விண்ணப்பதாரர்கள் துப்புரவு பணியாளர்கள், சலவை செய்பவர்கள், செங்கல் சூளைகளில் பணிபுரிபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் கூலி வேலை செய்பவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் https://eshram.gov.in/ என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.