
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில் ரிலீசான எதற்கும் துணிந்தவன் படத்தில் திவ்யா துரைசாமி சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். முதலில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதன்பிறகு விஜேவாக முன்னேறி இளம் ஹீரோயினாக கலக்குகிறார்.
இந்த நிலையில் ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் வாழை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். இது மட்டும் இல்லாமல் ஜி5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் மதில் மற்றும் டிங்கர் பிரிண்ட் 2 என்ற வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நாட்கள் போகப்போக திவ்யா துரைசாமிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வருகிறது. பா.ரஞ்சித் இயக்கிய புளூ ஸ்டார் படத்தில் நடித்து பிரபலமானார். அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா துரைசாமி கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் கிளாமராக போஸ் கொடுத்து மார்டன் உடையில் திவ்யா துரைசாமி போட்டோஸை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.
View this post on Instagram