நம்மில் பல பேருக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். சிக்கன் மற்றும் மட்டன் எடுக்காத நாட்களில் முட்டையை வைத்து நாம் ஏதாவது செய்து சாப்பிடுவோம். இன்று அந்த முட்டையை வைத்து சுக்கா எப்படி செய்வது என்று தெளிவாக இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
கடுகு – கால் கரண்டி,
சோம்பு – கால் கரண்டி,
முட்டை – ஆறு,
மிளகாய் தூள் – ஒரு கரண்டி,
மஞ்சள் தூள் – கால் கரண்டி,
கரம் மசாலா – ஒரு கரண்டி,
சிறிய வெங்காயம் – ஒன்றரை கப் நறுக்கியது,
இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு,
தயிர் – ஒரு கரண்டி,
உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
முட்டையை உடைத்து மஞ்சள் தூள் கரம் மசாலா மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். இட்லி கொப்பரையில் தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை வைத்து அதில் முட்டை கலவையை ஊற்றி 20 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
இதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு, சோம்பு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து வதக்கவும். இவை அனைத்தும் வதங்கிய பின்பு சின்ன வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.
கடைசியாக இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அதை நன்றாக வதக்கவும். மிளகாய் தூள் மஞ்சள் தூள் சீரகம் மிளகு ஆகியவற்றை சேர்த்து வதக்கி முட்டையை அதில் போட்டு கிளறி விடவும். அவ்வளுதான் சுவையான முட்டை சுக்கா தயார்.




