மெய்யழகன் படத்தில் நடிக்க ஸ்ரீதிவ்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?..

இயக்குனர் பிரேம்குமார் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு பிரேம்குமார் படங்கள் எடுக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல நடிகரான கார்த்தியை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மெய்யழகன் திரைப்படத்தை சூரியா ஜோதிகாவின் டுடே என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . நேற்று திரையரங்குகளில் மெய்யழகன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெய்யழகன் திரைப்படத்தில் மாமன் மச்சான் இடையே இருக்கும் குறும்புத்தனம் பாசம், சண்டை, நட்பு ஆகிய விஷயங்களை அழகாக காட்டியுள்ளனர். 33 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மெய்யழகன் திரைப்படம் உருவானது. இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகை ஸ்ரீதிவ்யா 70 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தலை காட்டாத ஸ்ரீதிவ்யா மெய்யழகன் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

Read Previous

பெரும் சோகம்..!! ஆற்றில் மூழ்கி 11ஆம் வகுப்பு மாணவன் பலி..!!

Read Next

கோவில்களில் மணி அடிப்பது எதற்காக தெரியுமா?.. அதற்கு பின்னால் இப்படி ஒரு அறிவியல் இருக்கிறதா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular