ராமநாதபுரம் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தளவாயல் சேதுபதி மன்னரின் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு..!!

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் குளத்தூரில் துணி துவைக்க பயன்படுத்திய கல்லில் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த தல வாயன் சேதுபதி மன்னரின் புதிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் குளத்தூர் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சி.பால்துரை, ஸ்ரீ.ராமமூர்த்தி ஆகியோர் தங்கள் பள்ளி மாணவர்கள் பர்சித் வீட்டின் பின்புறம் துணி துவைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கல்லில் பழமையான கல்வெட்டு இருப்பதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுருவுக்கு தகவல் கொடுத்தனர், இது பற்றி வே ராஜகுரு கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் பர்ஜீத்தின் தந்தை சகி குமார் தனது வீட்டின் அருகே உள்ள கண்மாயிலிருந்து சில கற்களை எடுத்து வந்துள்ளார் அதனுடன் கல்வெட்டு உள்ள கல்லும் வந்துள்ளது, துணி துவைக்க பயன்படுத்தியதால் வீட்டிற்கு வெளியில் கிடந்துள்ளது கல்வெட்டில் சாகார்த்தம் 1560 ல் மேட்ச் செல்லா நின்ற வெகு தானிய வருஷம் ஆவணி ஐந்தில் செவ்விருக்கை நாட்டில் குளத்தூர் குமில மடை உடைய நாயன் தளவாயல் சேதுபதி காத்த தேவர் புண்ணியம் என 12 வரிகளில் எழுதப்பட்டுள்ளது, இதன் தற்போதைய ஆண்டு கிபி 1638 ஆகும் இது இரண்டாம் சடைக்க தேவர் என்ற தளவாயல் சேதுபதி மன்னர் காலத்தை சேர்ந்ததாகும், கண்மாயின் உட்புறம் உயர்ந்து நிற்கும் இரு தூண்களையும் அதன் கீழே கல்பெட்டி போன்ற ஒரு அமைப்பை குமிழிமடை என்பர் கல் பெட்டியின் மேற்பகுதியிலும் தரை மட்டத்திலும் இருக்கும் நீரோடு சேறோடி துளைகள் மூலம் கண்மாயின் அதிகப்படியான நீரும் சேறும் வெளியேற்றப்பட்டு பாசன கால்வாயில் சேரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும், பாசனத்திற்கு நீர் திறக்கும் போது துளை மூடி இருக்கும் கல்லை நீக்குவர் குளத்தூர் கண்மாயில் இத்தகைய குறி மடையை மன்னர் அமைத்து தந்துள்ளதாக கல்வெட்டு தெரிவித்து இருக்கிறது, மேலும் குளத்தூர் அருகே உள்ள முதல் ஊரில் இம்மண்ணர் கிபி 1637 இல் குளமும் கலிங்கமும் அமைத்துக் கொடுத்த கல்வெட்டு உள்ளது தளவாயும் சேதுபதி மன்னர் காலத்தை சேர்ந்ததாக இரு கல்வெட்டுகள் மூன்று செப்பேடுகள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கல்வெட்டு இம்மன்னனின் வரலாற்றுக்கு வலு சேர்க்கும் ஆதாரமாக விளங்குகிறது இவர் நீர் பாசனத்தில் மிகுந்த கவனம் செலுத்தியதை அறியமுடிகிறது இந்த கல்வெட்டை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்..!!

Read Previous

பாஜகவுடன் எந்த உறவும் இல்லை இபிஎஸ் பேச்சு :அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்..!!

Read Next

ஜெகன் மோகன் ரெட்டி நிலைதான் திமுகவுக்கு ஏற்படும் சாபமிட்ட சீமான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular