இந்து மதத்தினர் போற்றி வழிபடும் ருத்ராட்சம் ஆயுர்வேதத்தில் மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படுகிறது. ருத்ராட்சம் Elaeocarpus Ganitrus எனப்படும் தாவரத்தின் விதையாகும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், காய்ச்சலால் ஏற்படும் அமைதியின்மை, காசநோய், இருமல், ஆஸ்துமா, இதய நோய்கள், ஞாபக மறதி, சின்னம்மை, சயாட்டிகா போன்ற பல நோய்களை ருத்ராட்சம் குணப்படுத்துகிறது. ஆயுர்வேதத்தில் மகாஹௌஷதி என்றும், சஞ்சீவினி என்றும் ருத்ராட்சம் அழைக்கப்படுகிறது. ருத்ராட்சத்தை செம்பு பாத்திரத்தில், தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடித்து வந்தால் நீரிழிவு நோயின் அறிகுறிகள் குறையும் என கூறப்படுகிறது.