• September 12, 2024

விபத்தில் சிக்கினால் ஒரு லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் அமௌன்ட் பெறலாமா..? எப்படி..? முழு விவரம் உள்ளே..!!

இந்தியாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் எளிதில் வங்கி சேவை வழங்கும் விதமாக அஞ்சுல்துறை சார்பில் இந்தியா போஸ்ட்மேன் பேங் என்கின்ற திட்டம் செயல்பட்டு கொண்டு வருகின்றது. இந்த திட்டத்தினை கடந்த 2018 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.

அஞ்சல் துறை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்பொழுது 5 கோடியை தாண்டி உள்ளது. இந்நிலையில் இந்தியா போஸ்ட் பெமென்ட் பேங்க் பொதுக் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.355 ,ரூ.555மற்றும் ரூ.755 என்ற பிரிமியத்தில் ஹெல்த் பிளஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் ஹெல்த் பிளஸ் ஆகிய இரண்டு விபத்து காப்பீட்டு திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த  காப்பீடு திட்டத்தின் காலம் ஒரு வருடமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 18 வயது முதல் 65 வயது உடைய உள்ள நபர்கள் இந்த காப்பீட்டிற்கு தகுதியுடையவர்களாக கருதப்படுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டவர்களுக்கு விபத்து ஏற்பட்டு அதனால் அவர்கள் உயிரிழந்தாலோ அல்லது உடலில் ஏதேனும் ஊனம் ஏற்பட்டாலோ அவருக்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும் சம்பந்தப்பட்டவரின் குழந்தைகள் திருமணத்திற்கு ரூ.50,000 வரை வழங்கப்படும் அதேபோல் விபத்தில் எலும்பு முறிவு போன்றவை ஏற்பட்டவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும்.

மேலும் வருடாந்திர பிரிமியம் ரூ.555 கான ஹெல்த் பிளஸ் திட்டத்தில் காப்பீடு செய்யப்பட்டவர்களுக்கு விபத்தால் உயிரிழப்பு அல்லது ஊனம் ஆகியவை ஏற்பட்டால் பத்து லட்சம் வரை வழங்கப்படும், சம்பந்தப்பட்டவரின் குழந்தையின் திருமணத்திற்கு ரூ.50,000 வரை வழங்கப்படும். அதேபோல் விபத்தில் எலும்பு முறிவு போன்றவை ஏற்பட்டால் 25 ஆயிரம் வரை வழங்கப்படும், இறுதி சடங்கு செலவுகளுக்கு ரூ ஐந்தாயிரம் வரை கோர முடியும் .

மேலும் வருடாந்திர பிரிமியம் ரூ. 755 காண எக்ஸ்பிரஸ் ஹெல்த் திட்டத்தின் கீழ் இந்த காப்பீடு செய்தவர்களுக்கு விபத்தினால் உயிரிழப்பு அல்லது ஊனம் ஏதேனும் ஏற்பட்டால் அவர்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும் சம்பந்தப்பட்டவரின் குழந்தைகள் திருமணத்திற்கு ஒரு லட்சம் வரை வழங்கப்படும், அதேபோல் விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு 25 ஆயிரம் வழங்கப்படும். பரிசோதனை மற்றும் பிற நன்மைகளையும் பெற முடியும்.

Read Previous

மனம் விட்டு இரண்டு நிமிடம் அழுதால் டிப்ரஷன் குறையுமா..? முழு தகவல் உள்ளே..!!

Read Next

உங்களிடம் ஓட்டுனர் உரிமம் உள்ளதா..? ஒரே கிளிக்கில் ஓட்டுநர் உரிமம் பெறுவது எவ்வாறு..? இதோ உங்களுக்காக..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular