இன்றைய காலகட்டங்களில் நாம் சாப்பிடும் உணவும் நாம் தூங்கும் நேரமும் நாம் உடலுக்கு பெறும் ஆபத்தையும் உடலில் பல மாற்றங்களையும் நிகழ்த்தி வருகிறது அப்படி இருப்பதனால் உடலில் வியர்வை சுரப்பி அதிகமாக இருப்பது மட்டுமல்லாமல் வியர்வையோடு கூட நாற்றமும் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.
வியர்வையால் நாற்றம் ஏற்படும் பொழுது அருகில் இருப்பவர்கள் கூட நம்மோடு பேசுவதற்கு தயங்குவதை நாம் கூர்ந்து கவனிக்க முடியும், வியர்வையின் போது வாடையை நீக்குவதற்கு வெட்டிவேர் அதீத மருந்தாக பயன்படுகிறது, வெட்டிவேரை தண்ணீர் காய வைத்தோ அல்லது வெட்டிவேரை அரைத்து உடலில் பூசிக்கொண்டு குளிப்பதனால் உடலில் உள்ள நாற்றங்கள் நீங்கி நறுமணமாக மாறிடக்கூடும், வெட்டிவேரில் உள்ள இயற்கை நறுமணமானது வியர்வையின் துர்நாற்றத்தை நீக்கி நமது உடலை புத்துணர்வாக வைத்துக் கொள்ளும், வாரத்தில் மூன்று முறை வெட்டிவேர் பயன்படுத்தி குளித்து பாருங்கள் நல்ல மாற்றம் உங்களுக்கே தெரியும்..!!