கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே அதிக வெப்பம் பதிவாகுவதாக IMD எச்சரித்துள்ளது. கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு பிப்ரவரியில் வெப்பம் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகாவில் இயல்பை விட 4முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களில் வெப்ப அலை ஏற்படும் என்பதால் முதியோர்கள், குழந்தைகள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென IMD Warning கொடுத்துள்ளது.




