வெயிலுக்கு இதமாக மின்ட் லஸ்ஸி..!! எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்..!!

இந்தக் கோடை வெயில் அதிகமாக இருக்கிறது. அதனால் நமக்கு இதமாக இருக்கும் உணவுகளையும் பானங்களையும் நாம் அதிகமாக விரும்பி குடித்து வருகிறோம். அந்த வகையில் மின்ட் லஸ்ஸி எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம். இது நமது உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய ஒன்றாகும்.

தேவையானவை:

1 கட்டு புதினா இலைகள்,

1 கப் கெட்டியான தயிர்,

1/2 கப் சர்க்கரை,

1/4 டீஸ்பூன் சீரகத் தூள்,

1 சிட்டிகை உப்பு.

செய்முறை:

புதினாவை நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். சீரகத்தை கழுவி கடாயில் சேர்த்து நன்கு வறுத்து அதை ஆற வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஜாரில் கெட்டியான தயிர் சீரகத்தூள் உப்பு சர்க்கரை புதினா இலைகள் அனைத்தையும் சேர்த்து நுரை பொங்க அடித்து எடுக்கவும். ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள் சேர்த்து அடித்த தயிர் கலவையை சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான மின்ட் லஸ்ஸி தயார்.

Read Previous

குளிர்பானத்துக்கு பதிலா இதை குடிங்க..!! இதில் இருக்கும் நன்மைகள் எண்ணற்றது..!!

Read Next

வயிற்றுக்குள் குடல் புழுக்கள் எப்படி நுழைகின்றன?.. அவற்றை எவ்வாறு நீக்க வேண்டும்?.. தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular