
வெளியான வாழை படத்தின் OTT ரிலீஸ் தேதி..!! எப்போது வருகிறது தெரியுமா?..
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23 ஆம் தேதி வெளியான திரைப்படம் வாழை. இந்தப் படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் போன்ற நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். ஏழை மக்களின் வாழ்வியலையும், வறுமையையும் சொல்லும் இந்த திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்துள்ளது எனலாம்.
தற்போது இந்தத் திரைப்படம் குறித்த OTT அப்டேட் கிடைத்துள்ளது. disney plus hotstar நிறுவனம் இந்தப் படத்தின் OTT உரிமையைப் பெற்றுள்ளது. மேலும், இந்தப் படம் வரும் செப்டம்பர் மாத இறுதியில் disney plus hotstar இல் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. கூடிய சீக்கிரம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.