சத்தீஸ்கர் மாநிலத்தில் ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் வித்தியாசம் வித்தியாசமாக திருமண சடங்குகளை நடத்தி வருகின்றனர். அப்படி ஒரு நூதனமான ஒரு சடங்கு சம்பிரதாயம் தான் இப்பொழுது நிகழ்ந்துள்ளது. அதாவது, சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் கரியா தோலா என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த திரேந்திர சாகு என்பவருக்கும் ஜோதி சாகு என்ற பெண்ணுக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
வழக்கம் போல் இருவரும் பரஸ்பரமாக மோதிரம் மாற்றி கொண்டனர். அந்த சமயம் மோதிரம் போல், திடீரென ஹெல்மெட்டையும் ஒருவொருக்கொருவர் மாற்றி உள்ளனர். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மேற்கொள்வதற்காக இந்த செயலில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர்.
சமீபத்தில், மாப்பிள்ளை பிரேந்திர சாகுவின் தந்தை பஞ்சுராம் சாகு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவர் ஹெல்மெட் அணியாத ஒரே காரணத்தால் தான் அவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. இதனால் தான் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறி உள்ளனர். தற்போது அந்த ஜோடிக்கு எல்லாரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.