வயது வித்தியாசமின்றி தலையில் வெள்ளை முடி தோன்றுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அண்மையில் இங்கிலாந்தில், ரியான் என்பவர் ஹேர் டையைப் பயன்படுத்தினார். மறுநாள் காலை கண்விழித்து பார்த்தபோது முகம் முழுவதும் வீங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பயன்படுத்திய ஹேர் டையில் பாராபெனிலினெடியமைன் என்ற ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.