வாகன உற்பத்தியாளரான ஃபோர்ஸ் மோட்டார்ஸ், டிசம்பர் 2025ல் தனது விற்பனையில் 49% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இன்று (ஜன., 02) தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் டிசம்பரில் 2,952 வாகனங்களை விற்பனை செய்துள்ளது, இது முந்தைய ஆண்டு டிசம்பரில் விற்பனை செய்யப்பட்ட 1,985 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். மேலும், ஏப்ரல் முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் விற்பனை 25% அதிகரித்து 24,920 வாகனங்களாக உயர்ந்துள்ளது.




