அடிக்கடி மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் என்ன அற்புதம் நேரும் தெரியுமா..??

Oplus_131072

 

பொதுவாக மாதுளை பழம் மற்ற பழங்களை விட பல்வேறு மருத்துவ குணம் உடையது .இந்த மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.ஒவ்வொரு சுவையுள்ள பழத்திலும் ஒவ்வொரு நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த பழத்தின் எந்த சுவையில் என்ன நன்மை உள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம் 1.பொதுவாக மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து தினமும் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகி,நம் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.
2.நாம் இந்த மாதுளையின் இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது.
3.இந்த இனிப்பு மாதுளை பழம் பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
4.. மேலும் அடிக்கடி மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது.
5.மேலும் ஆரோக்கியம் தரும் மாதுளை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது.
6.மேலும் அடுத்து புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது.
7.புளிப்பு மாதுளை இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது.
8.புளிப்பு மாதுளை தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது.
9.புளிப்பு மாதுளை பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது.
10.அடுத்து மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
11.தொடர்ந்து ஏதாவது ஒரு நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறி உடல் நலம் பெறுவார் .

 

Read Previous

சுக்கு மருத்துவக் குணங்கள்..!! நாம் யாரும் அறிந்திடாத தகவல்கள்..!!

Read Next

எந்தெந்த பழங்களில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular