அதிமுகவில் அதிரடி நடவடிக்கை: சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 13 பேர் நீக்கம்..!!

 

 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின் பேரில், சி.வி. சண்முகம் ஆதரவாளர்களாகக் கருதப்படும் 13 பேர் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 

அதன்படி, விழுப்புரம் மாவட்ட அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்களான எஸ்.ஈ. ஏழுமலை, ஜே. சங்கர், காமேஷ் உள்ளிட்ட 13 பேரின் கட்சிப் பொறுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

அதிமுகவில் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை கட்சியின் உள்கட்சி அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.

Read Previous

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பேரணி: நாடாளுமன்ற கதவு மூடல்..!!

Read Next

நகைக்கடன் வாங்கும் முன் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular