கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பேரணி: நாடாளுமன்ற கதவு மூடல்..!!

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்.

 

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் டெல்லியில் இன்று (ஜூலை 20) தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயில்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. போராட்டக்காரர்களின் பேரணியை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெற்ற இந்தப் போராட்டம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

முதல்வர் விஜய்யை சந்திக்க 2,400 கி.மீ. பாதயாத்திரை தொடங்கிய ராஜஸ்தான் ரசிகர்..!!

Read Next

அதிமுகவில் அதிரடி நடவடிக்கை: சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 13 பேர் நீக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular