வீடு புகுந்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் மரிய வில்சனுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என அவரது சகோதரர் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பினரும் சமரச தீர்வு மையத்தின் மூலம் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், அமைச்சர் தரப்புடன் சமரசம் செய்துகொள்ள விருப்பமில்லை என அவரது சகோதரர் மனைவி தெரிவித்துள்ளதால், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.




