“விஜய் பிரதமர் வேட்பாளரா?” – டி.கே.சிவகுமார் பதில்!

 

 

தென் மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குப் பிறகு, “விஜய் பிரதமர் வேட்பாளரா?” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பதிலளித்தார்.

 

இதற்கு பதிலளித்த அவர், “அது எனக்குத் தெரியாது; அதுபற்றி பேச விரும்பவில்லை. அரசியல்வாதிகள் அரசியல் பேசுவதைவிட நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

 

மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பாக 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை வரையறை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் டி.கே.சிவகுமார் கூறினார்.

 

விஜயின் அரசியல் எதிர்காலம் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்து வரும் நிலையில், கர்நாடக முதல்வரின் இந்தப் பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது.

Read Previous

மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு! தகுதியற்ற பயனாளிகளை நீக்கும் பணி தொடக்கம்!

Read Next

அமைச்சர் மரிய வில்சன் வழக்கு: “சமரசத்திற்கு விருப்பமில்லை” – அண்ணி திட்டவட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular