தென்காசியில் டெங்கு பாதிப்பு தீவிரம்! அடுத்தடுத்து 4 பேர் உயிரிழப்பு!

 

 

தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமி ரிஹானா மேரி மற்றும் நர்மளா (27) உள்ளிட்ட 4 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதனிடையே, டெங்கு பாதிப்பால் மேலும் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Previous

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நிலை கவலைக்கிடம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular