அம்மா உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ₹25-க்கு அசைவ உணவு? பாமக நிழல் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு..!!

 

 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையில் இன்று (ஜூலை 27) கட்சியின் நிழல் பட்ஜெட்டை வெளியிட்டார். இதில் ஏழை மற்றும் தொழிலாளர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மா உணவகங்களில் ரூ.25-க்கு அசைவ உணவு வழங்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களின் அன்றாட செலவைக் குறைக்கும் வகையிலும், சத்தான உணவு அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்த அறிவிப்பு பாமக வெளியிட்ட நிழல் பட்ஜெட்டின் ஒரு முக்கிய பரிந்துரையாக கவனம் பெற்றுள்ளது.

Read Previous

சிதம்பரம் அருகே மாணவியை தாக்கிய வழக்கு: சந்தேகநபர் உயிரிழந்ததாக தகவல்..!!

Read Next

துப்பாக்கி சுடும் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்… துப்பாக்கி ஏந்தி பயிற்சியிலும் அசத்தல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular