அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு தொடர்பாக சுயாதீனமான மற்றும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் இணைந்து எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், கோயில் அறக்கட்டளையின் நிதி விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.




