ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, வீட்டுப் பணிகள் தொடர்பாக பெற்றோர் கண்டித்ததாகக் கூறப்படும் நிலையில், 19 வயதான கல்லூரி மாணவி சோனியா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நேரமாக அறையைத் திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் உயிரிழந்த நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.




