Oplus_16908288
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே, விபத்து ஏற்பட்டதாகக் கூறி சில இளைஞர்கள் அரசு பேருந்தின் முன்பு இருசக்கர வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், அந்தக் காட்சிகள் வேகமாக பரவி வருகின்றன. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு, ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பொதுப் போக்குவரத்து ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.




