பக்குவமாக உரிய முறையில் எடுத்துகொண்டால் நிச்சயம் கை மேல் பலனுண்டு.
சிலருக்கு நரம்புத் தளர்ச்சியால் கைகால் நடுக்கமாக இருக்கும். இவர்கள் 21 நாட்கள் வரை பூனைக்காலி விதையுடன் இன்னும் சில மூலிகை கலந்து பயன்படுத்தினால் நரம்புத்தளர்ச்சி குணமாகும். இதற்கான பொடிதயாரிக்கும் முறை குறித்து பார்க்கலாம்.
பூனைக்காலி விதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனை கிழங்கு, நத்தை சூரி விதை, சாலாமிசிரி, சிறுபீளை, அமுக்கிரான் கிழங்கு போன்றவற்றை சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து, பொடியாக்கி கொள்ளவும். தினமும் அரை டீஸ்பூன் அளவு எடுத்து அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து தொடர்ந்து 21 நாட்கள் வரை இதை எடுத்துகொள்ள வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருள்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
மேக நோய் குணப்படுத்தும்
பூனைக்காலி விதையை மட்டும் வாங்கி தனியாக பொடித்து வைக்கவும். மேக நோய் என்னும் சிபிலிஸ் என்பது தொற்று நோயால் வரக்கூடியது. குறிப்பாக பாலுறவால் ஏற்படும் தொற்று ஆகும். இது ஒருவகை பாக்டீரியாவால் உண்டாகிறது.
பாதுகாப்பற்ற பாலுறவால் இவை உண்டாகிறது. இந்நோய் தாக்கப்பட்டால் தொடர்ந்து 6 மாதங்கள் வரை இருக்கும். அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பல்வேறு உடல் உபாதைகள் உண்டாக கூடும்.
பிரச்சனையால் அவதிப்படும் பெண்கள் 1 கிராம் அளவு பாலில் கலந்து குடித்து வர வேண்டும். இவை மேக நோயை படிப்படியாக குறைக்க செய்யும். ஆண்களும் இதை குடிக்கலாம்.
ஆண்மை பெருக்கும்
பூனைக்காலி விதை, சிறு நெருஞ்சில் விதை,தண்ணீர் விட்டான் கிழங்கு,நெல்லி அனைத்தையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் சீந்தில் பொடி, நாட்டுச்சர்க்கரை கலந்து தேனில் குழைத்து காலை மாலை என இரண்டு வேளையும் பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும். விந்து நீர்த்து போவது குறையும். தாது விருத்தியை அதிகரிக்கும். இவை நரம்புகளை வலுவாக்கி ஆண்மை பாதிப்பை சரிசெய்யகூடியது.
பூனைக்காலி விதை உருண்டை
பூனைக்காலி விதையை மருந்தாக எடுக்காமல் ஸ்நாக்ஸ் உருண்டையாக எடுத்துகொள்ளலாம்.
பொட்டுக்கடலை – 250 கிராம்
பூனைக்காலை விதை- 50 கிராம்
கேழ்வரகு மாவு -ஒரு தேக்கரண்டி,
பனைவெல்லம் – இனிப்புக்கேற்ப,
தேங்காய்த்துருவல் – 2 தேக்கரண்டி,
நெய் – தேவைக்கேற்ப,
உலர் பருப்புகள் – தேவையெனில்
செய்முறை
வாணலியில் பூனைக்காலி விதை சேர்த்து வறுத்து அதனுடன் பொட்டுக்கடலை, கேழ்வரகு அனைத்தையும் சேர்த்து வறுத்து தட்டில் கொட்டி ஆறவிடவும். வெல்லத்தைப் பொடித்து வைக்கவும்.
நெய் விட்டு உலர் பருப்புகளை ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் பொடித்த வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து நெய் விட்டு உருண்டையாக்கி பிடிக்கவும். சத்தான சுவையான உருண்டை தயார்.
இதை பூப்படைந்த பெண்களும் வயது வந்த ஆண்களும் குடித்து வந்தால் போதும். நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள்.




