ஆனந்தமாக இருக்க வழி என்ன தெரியுமா..??

Oplus_131072

ஆனந்தமாக இருக்க வழி!

அன்பையும் பாசத்தையும் விலக்காதீர்கள்1

அந்த தோட்ட வீட்டின் அருகில் ஒரு பெரிய ஆலமரம் கிளைத்து தழைத்திருந்தது. விடுமுறைக் காலங்களில் அந்த தோட்டத்து உரிமையாளரின் நண்பர்களும் சுற்றத்தினரும் வந்து அந்த ஆலமரத் தடியில் கூடி குலவி பொழுதை இனிமையாக கழிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

எந்த விடுமுறையாக இருந்தாலும் யாராவது வந்த வண்ணம் இருந்து

ஆனந்தித்து செல்வர். அங்கு வருபவர்கள் பலவிதமான பறவைகளின் கூடாரமாக இருந்த அந்த இடத்தில் பறவைகளின் ஒலியைக் கேட்டு இன்புறுவர்.

ஒரு விடுமுறை நாளில் அந்த உரிமையாளரின் பேரன் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். ஒரு பறவையின் எச்சம் அவன் மேல் விழுந்தது. அதனால் கோபம் கொண்ட உரிமையாளர் அந்த பறவைகளையெல்லாம் விரட்டச் சொன்னார்.

வேலையாட்கள் விரட்ட பறவைகள் தோட்டத்தில் உள்ள மற்ற இடத்தில் தங்கின. அங்கிருந்தும் விரட்டப்பட்ட பறைவைகள் புதிய இடம் தேடித் தங்கின. அடுத்த சில நாட்களில் பறவைகளின் ஒலியின்றி அமைதியாக இருந்தது அந்த தோட்டத்தில். உள்ள ஆலமரம் பழுத்து இலைகளை உதிர்த்தது. நாளடைவில் அந்த தோட்டத்தில் மாயன அமைதி தென்பட்டது. நண்பர்களே

சுற்றத்தினரோ அங்கு வருவதில்லை. ஒர் ஒதுக்கப் பட்ட இடமாக மாறியிருந்தது அந்த தோட்டம்.

பசுமையாக அழகாக, ஆரவாரமாக ஆனந்தமாக இருந்த நம் தோட்டம் இப்படி ஆனதற்கான காரணத்தை யோசித்த உரிமையாளர், பறவைகளை விரட்டச் செய்தற்கு வருந்தினார்.

கூண்டுகள் செய்து அணில் ,முயல் ஆகியவற்றை வாங்கி வந்து வளர்த்தார். அவைகளத் தொடர்ந்து சிட்டுக் குருவிகளுக்கு தீனி அளித்தார். கொஞ்சம் கொஞ்சமாய் அங்கு பறவைகளின் ஒலி அதிகரிக்க சோகமாய் இருந்த மரங்கள் எல்லாம் துளிர்விட்டு மீண்டும் பசுமையை பரப்ப அந்த தோட்டம் மீண்டும் ஆனந்தத்திற்கு திரும்பியது.

வாழ்வில் பறவை எச்சத்தை போன்ற நிகழ்வுகள் தொல்லையாய் தோல்வியாய் வரக்கூடும். அவற்றைத் துடைத்துவிட்டு எதிர்மறையாக சிந்திக்கமல் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற ஆக்க பூர்வமாக எண்ண வேண்டும்.ஆனந்தமாக இருக்க வழி!அன்பையும் பாசத்தையும் விலக்காதீர்கள்!

 

Read Previous

உடல் செயலின் கால அட்டவணை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

குபேர வழிபாடு – வியாழக்கிழமை அன்று இதை மட்டும் செய்யுங்க போதும்..!! வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular