திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலைப்பகுதியில் தர்கா அருகே உள்ள தூணில் விளக்கேற்ற அனுமதி வழங்கிய உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ஆன்மீக நிகழ்ச்சியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், “குருவை கடவுளின் உருவமாகப் பார்ப்பதால் எங்களை அவர்கள் அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் என்று அழைக்கிறார்கள். அவ்வாறு கூறுபவர்கள்தான் உண்மையான அயோக்கியர்கள், முட்டாள்கள் மற்றும் காட்டுமிராண்டிகள்” என கூறியுள்ளார்.




