டெல்லியில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்திய விவகாரத்தில் இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார். சதித்திட்டம் தீட்டியதாக கூறி டெல்லி போலீஸ் 7 நாள் காவல் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட முயற்சி நடைபெறுகிறது என அவர் குற்றம்சாட்டினார்.




