இதனால்தான் அரைஞாண் கயிறை அணியச் சொல்கிறார்களா..??

 

அரைஞாண் பெயர் விளக்கம் :

ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு இடுப்பு, அரை உடல் என்ற பொருளும் இருக்கிறது. இதனால் தான் அரைஞாண் கயிறு என இதற்கு பெயர் வந்தது.

அரைஞாண் கயிறு உண்மையில் எதற்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினார்கள் என்று தெரியுமா?

அரைஞாண் கயிறு என்பது நம்முடைய சிறிய வயதில் நம் இடுப்பில் கட்டிவிடப்படும் ஒருவகை கருப்பு கயிறு ஆகும். அரைஞாண் கயிற்றின் பலன்களை பற்றி பல விதங்களில் கூறலாம். நம்மை விஷம் கொண்ட பூச்சிகள் மற்றும் பாம்பு போன்றவை தீண்டி விட்டால் அந்த விஷம் நமது கடிவாய் மற்றும் இதயத்திற்கு செல்லாமல் தடுப்பதற்கு, அரைஞாண் கயிறு பயன்படுகிறது.

எப்படியெனில் நமது கையினால், அரைஞாண் கயிற்றை அறுத்தெடுத்து அவசர உதவியாக இறுக்கிக் கட்டும் ஒரு தற்காப்புக்காக பயன்படுகிறது. கைக்குழந்தைகளுக்கு இதயத் துடிப்பானது கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். ஏனெனில் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு குழந்தை தன்னை தயார் செய்து கொள்ளும் போது இதயத்துடிப்பு அதிகமாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் அதன் இதயத் துடிப்பை சீராக்க உதவுவது குழந்தையின் இடுப்பில் கட்டப்படும் அரைஞாண் கயிறு தான்.

இடுப்புக்கு அருகில் மட்டுமே ரத்தக் குழாய்கள் மெலிதாக இருக்கும். அதேபோல் தோலின் மிக அருகில் செல்கின்றன. எனவே ஈரம் பட்டாலும் அறுபடாத பொருளான வெள்ளை எருக்கம் பூவின் நாரினை கயிறாகத் திரித்து, அதையே குழந்தைகளின் இடுப்பில் கட்டிவிடுவார்கள். ஆனால், நம் முன்னோர்கள் அவ்வாறு கட்டுவது பேய், பிசாசு, காத்துக்கறுப்பு அண்டாமல் இருப்பதற்காக என்ற நம்பிக்கையை விதைத்தார்கள்!

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண் கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது என்பது ஓர் மருத்துவ முறை ஆகும். ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது.

இது இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இயல்பாகவே பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு குடல் இறக்க நோய் அதிகமாக ஏற்படுகிறது. இதை தடுக்கவே ஆண்கள் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

சில விஷயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அரைஞாண் கயிறை கட்டத்தான் செய்கிறார்கள். இனிமேல் நாமும் நம் பிள்ளைகளுக்கு இதுபோன்ற நம் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காது சிறுசிறு விஷயங்களையும் அவர்களுக்கு எடுத்துக் கூறுவோம்.

Read Previous

ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..? அப்படி எடுத்துக் கொள்ளும் காசுகளை என்ன செய்ய வேண்டும்?..

Read Next

பாடையில் ஒரு நாள்..!! படித்ததில் மிகவும் பிடித்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular