இதய நோய் வருவதை தடுக்குமா..?? எள்ளில் உள்ள சத்துக்கள் என்னென்ன..??

இதய நோய் வருவதை தடுக்குமா..?? எள்ளில் உள்ள சத்துக்கள் என்னென்ன..??

வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் அதிகம் உள்ளது. எள்ளில் இரும்பு சத்து வைட்டமின் ஏ மற்றும் பி ஆகியவை நிறைந்துள்ளதால் இளநரையை தடுக்கும் முடி உதிர்தல் ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் தீரும். இதை சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறிவிடும் .முக்கியமாக செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் தினமும் அரை தேக்கரண்டி எள் சாப்பிடுவது சிறந்தது. உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது உடலில் ஏதேனும் நோய் உள்ளோர் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது எள்ளில் துத்தநாகம் நிறைந்து காணப்படுவதால் உடலில் குலஜன் கட்டுமானத்தை ஊக்குவிக்கிறது. மற்றும் தோல் சுருக்கத்திலிருந்து காப்பாற்ற உதவுகிறது. மாதவிடாய் பிந்தைய பெண்களுக்கு எள் நல்லது ஏனெனில் அதில் உள்ள வைடோ நியூட்ரியன்ட்கள் ஹார்மோன் ஏற்ற தாழ்வுகளை ஒழுங்கு படுத்துகின்றன. மற்றும் சமப்படுத்துகின்றன. எள்ளில் உள்ள அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளடக்கம் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.நல்லெண்ணையில் சீசமலின் எனும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது. எனவே இதை உணவில் அதிகம் சேர்க்கும் பொழுது இதயத்திற்கு பாதுகாப்பு அளித்து இதய நோய் வராமல் தடுக்கிறது. நல்லெண்ணையை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது. நல்லெண்ணெயில் இருக்கும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் நல்லெண்ணெய் சாப்பிடுவது நல்ல பலனை தரும். தினமும் காலையில் நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால் சொத்தைகள் நீங்குவதோடு பற்கள் பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

Read Previous

உழைப்பின் பலன் உயர்வு தான்..!! அருமையான சிறுகதை..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

வாழ்க்கையின் 10 கடினமான உண்மைகள்..!! கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular