இந்தியன் டாய்லெட் – வெஸ்டர்ன் டாய்லெட் ரெண்டுல எது நல்லது..??

Oplus_131072

 

மேற்கத்திய பாணியை எல்லாவற்றிலும் பின்பற்றும் இந்தியர்கள், கழிப்பறைகளையும் மேற்கத்திய பாணியில் பின்பற்றுகின்றனர். ஆனால் அவற்றில் இருக்கும் அபாயங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம். அதனை உணர்த்தவே இந்த பதிவு.

​கழிவறை சுகாதாரம்?

மனிதன் காடுகளிலும் மேடுகளிலும் அலைந்த காலத்தில் தனது காலைக் கடன்களை முடிக்க இயற்கையான இடங்களைத் தேடினான். ஆனால் நாகரீக வளர்ச்சியில் வீடுகள் வரத்தொடங்கியவுடன் காலைக்கடன்களை முடிக்க கழிவறைகளை கட்டினான். பல ஆண்டுகளாக இந்திய கழிப்பறைகளை பயன்படுத்திவந்தவ நம் இந்தியர்கள் மேற்கத்திய மோகத்தால் தற்போது பரவலாக மேற்கத்திய பாணியில் வெஸ்டர்ன் கழிப்பறைகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இன்றைய அடுக்கு குடியிருப்புகள் முதல் தனி வீடுகள் வரை வெஸ்டர்ன் கழிப்பறைகள் ஆக்ரமித்து வருகின்றன.

​எது பெஸ்ட்?

இரண்டு கழிப்பறைகள் இருக்கும் வீடுகளில் ஒன்று கட்டாயம் வெஸ்டர்ன் கழிப்பறையாக உள்ளது. இதனைப் பயன்படுத்துவது எளிது என்பது மக்களின் நம்பிக்கை. இடப்பற்றாக்குறை இருக்கும் இந்த காலத்தில் வெஸ்டர்ன் கழிப்பறைகளுக்கான இடம் இந்திய கழிப்பறைக்கான இடத்தைவிட குறைவாகும். வயதானவர்கள் கீழே உட்கார்ந்து எழுவதைவிட வெஸ்டர்ன் கழிப்பறைகளை பயன்படுத்துவது எளிது என்று நினைக்கின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் இந்திய கழிப்பறைகளை விரும்பும். ஒருசிலர் நம் மத்தியில் இருக்கவே செய்கின்றனர்.

எவ்வளவு வசதிகள் இருந்தாலும் வெஸ்டர்ன் கழிப்பறைகளில் சில அசௌகரியங்கள் இருக்கின்றன. இந்திய கழிப்பறைகள் வெஸ்டர்ன் கழிப்பறைகளைவிட சிறந்தது என்பதை வலியுறுத்த 5 காரணங்கள் உங்களுக்காக கூறப்பட்டுள்ளன. தொடர்ந்து படித்து அவற்றை அறிந்து கொள்ளுங்கள்.

1) உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகின்றன..

இந்திய கழிப்பறைகளை தினமும் பயன்படுத்துவது ஒருவகை உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும். அறிந்தபோதும் பெரும்பாலும். உடற்பயிற்சி செய்வதை நாம் புறக்கணிக்கிறோம். அதுவே இந்திய கழிப்பறைகளைப் பயணப்படுத்தவதால் கைகள் மற்றும் கால்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும் மேலும் உடலில் இருந்து வியர்வை வெளியேறும். இந்திய கழிப்பறைகளை பயன்படுத்துவதால் இரத்த ஓட்டம் அதிகரிப்பதாகவும், உங்கள் கைகள் மற்றும் கால்கள் சிறந்த பயிற்சியைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

2) செரிமானத்தை மேம்படுத்துகிறது…

இந்திய கழிப்பறைகளைப் பயன்படுத்தி மலம் கழிப்பதால், உங்கள் வயிற்றுப்பகுதி அழுத்தப்படுகிறது. இந்த அழுத்தம் காரணமாக வயிற்றில் உள்ள உணவுகள் அழுத்தப்பட்டு, செரிமானம் எளிதாகிறது. வெஸ்டர்ன் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதால் வயிற்றுக்கு எந்த ஒரு அழுத்தமும் கிடைப்பதில்லை. சில நேரங்களில் முழுவதும் மலம் கழித்த உணர்வும் கிடைப்பதில்லை. குனிந்து எழும்போது வயிற்றுத் தசைகளுக்கு மிக அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை துரிதப்படுத்தி, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

3) சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கிறது…

வெஸ்டர்ன் கழிப்பறைகளில் நாம் காகிதங்களைப் பயன்படுத்துகிறோம். இதனால் காகிதங்கள் அதிக அளவில் வீணாகிறது. இந்திய கழிப்பறைகளில் காகிதங்களை வீணடிப்பதில்லை. அதனால் சுற்றுப்புறச்சூழல். பாதுகாக்கப்படுகிறது. மேலும் வெஸ்டர்ன் கழிப்பறைகளில் இந்திய கழிப்பறையைக் காட்டிலும் அதிக தண்ணீர் செலவாகிறது. வெஸ்டர்ன் (மேற்கத்திய முறை) கழிப்பறைகளைப் பயன்படுத்துவதால் ஏராளமான காகிதங்கள் செலவழிக்கப்படுகின்றன. காகித உற்பத்திக்காக ஏராளமான ஆயிரக்கணக்கான மரங்கள் சுற்றுப்புறச் சூழலையும் கருத்தில் கொள்ளாமல் வெட்டப்படுகின்றன. இதுவே இந்தியக் கழிப்பறையை அதிகமாகப் பயன்படுத்துகிற பொழுது தவிர்க்கப்படுகிறது.

4) கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது….

கால்களை மடித்து உட்கார்ந்து மலம் கழிப்பது ஒரு சிறந்த பயிற்சி என்பதால் கர்ப்பிணி பெண்கள் இந்திய கழிப்பறைகளைப் பயன்படுத்துவது நல்லது. இந்திய கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு கருப்பையில் அழுத்தம் ஏற்படுவதில்லை. சிறப்பான சுகப்பிரசவம் ஏற்படுவதற்கு கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து இந்திய கழிப்பறைகளைப் பயன்படுத்துவது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் குனிந்து நிமிர்ந்து எழுவது சிரமமான விஷயம் தான். ஆனால் இந்தியக் கழிப்பறைகளை அவர்கள் பயன்படுத்துகின்ற பொழுது, கருப்பையில் ஏற்படும் அழுத்தம் வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்துவதை விடவும் குறைவு தான் என்று சொல்லப்படுகிறது.

5) பெருங்குடல் புற்றுநோய்…

இந்திய கழிப்பறைகளில் கால்களை மடித்து உட்காருவதால் பெருங்குடலில் உள்ள மலம் முழுவதும் வெளியேறுவதற்கு உதவியாக உள்ளது. இதனால் மலச்சிக்கல், பெருங்குடல் அழற்சி, குடல் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும் காரணிகள் தடுக்கப்படுகிறது. பெருங்குடல் மற்றும் இதர நோய்கள் நோய்கள் வராமல் தடுப்பதற்கு இந்திய முறைப்படி இருக்கின்ற கழிப்பறையே சிறந்தது.

Read Previous

வெள்ளிக்கிழமை இதையெல்லாம் செய்யவே கூடாது..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

இதய அடைப்பு நீக்கி ஆளை அசர வைத்து சுறுசுறுப்பாகும் இஞ்சி எலுமிச்சை தேன் கலந்த பானம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular