அமெரிக்கா, இஸ்ரேல்–ஈரான் போரின் தாக்கத்தால் இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக வீழ்ந்தது. கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்ததன் தாக்கத்தால் ரூபாய் மதிப்பில் இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காலையில் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் தற்போது ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது.




