இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

 

மகாராஷ்டிராவில் 14 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த சிறுவன், தனது நண்பருடன் சேர்ந்து சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதனை வீடியோவாக பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த வீடியோ இணையத்தில் வெளியானதை சிறுமியின் உறவினர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.

இதையடுத்து சிறுமியிடம் விசாரித்தபோது, நடந்த சம்பவம் குறித்து அவர் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் இரண்டு சிறுவர்களையும் போலீசார் கைது செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

பாதுகாப்பு அமைச்சகத்தில் 62 காலியிடங்கள்: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு!

Read Next

பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறல்: நடத்துநருக்கு பயணிகள் தர்மஅடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular