தெலங்கானா மாநிலம் மஞ்சிர்யாலா மாவட்டம் இந்தாரம் கிராமத்தைச் சேர்ந்த லலிதா (35), உடல்நலக்குறைவு காரணமாக கரீம் நகரில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவரை கவனித்துக்கொள்ள முடியாது எனக் குடும்பத்தினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மருத்துவமனையில் இருந்து காரில் அழைத்துச் சென்ற குடும்பத்தினர், வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் காட்டாரம்–மேடாரம் சாலையோரம் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் லலிதாவை விட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.




