செல்போன் மாயமான விவகாரத்தில் மாணவிகள் மோதல்!

 

 

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள நர்சிங் கல்லூரி விடுதியில் செல்போன் காணாமல் போன விவகாரம் தொடர்பாக மாணவிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

 

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும், உள்ளூர் மாணவிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதாக கூறப்படுகிறது.

 

இருதரப்பினரும் மரக்கட்டைகள், பக்கெட்டுகள் மற்றும் தட்டுகளை வீசி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் விடுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Read Previous

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு கடித்து பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு!

Read Next

“இத்தனை ஆண்டுகளாக மோடி ஏன் வந்தே மாதரம் பாடவில்லை?” – கார்கே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular