Oplus_131072
வெயில் காலம் மட்டுமின்றி, இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலருக்கும் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனை உடல் உஷ்ணம்.
நீண்ட தூரப் பயணம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது ஊழியர்கள், போதிய தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடாகி, தலைமுடி உதிர்தல், முகப்பரு, வயிற்று வலி எனப் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறோம்.
சித்தர்கள் காட்டிய மிக எளிய, ஆனால் அதீத சக்தி வாய்ந்த ஒரு ரகசிய தீர்வு இதோ…
*தேவையானவை*
சுத்தமான நல்லெண்ணெய் – ஒரு குழி கரண்டி
மிளகு -2 அல்லது 3
தோல் உரிக்காத பூண்டு -1 பல்
புழுங்கல் அரிசி-6
*செய்முறை:*
நல்லெண்ணெயை மிதமான தீயால் சூடுபடுத்தவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு பூண்டு புழுங்கல் அரிசி சேர்த்துச் சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
எண்ணெய் ஆறியதும், அந்த எண்ணெயை உங்கள் இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் தடவவும்.
சரியாக இரண்டு நிமிடங்கள் மட்டுமே வைத்திருக்க வேண்டும். பிறகு உடனே கால்களைக் கழுவி விட வேண்டும்.
*அற்புத பலன்கள்:*
உடனடி குளிர்ச்சி: இதைத் தடவும் போதே உங்கள் உடல் சூடு குறைந்து குளிர்ச்சி அடைவதை உணரலாம்.
*மன அழுத்தம் நீங்க:*
அனைத்து துறையில் வேலை செய்பவர்கள் தினமும் குளிக்கும் முன் ஒரு நிமிடம் இவ்வாறு செய்தால் மன அழுத்தம் குறையும்.
*விந்து விருத்தி:*
குழந்தை பாக்கியம் இல்லாத ஆண்களுக்கு, விந்து அணுக்கள் விருத்தி அடைய சித்தர்கள் பரிந்துரைத்த பழமையான முறை இது.
*ஆரோக்கியமான வளர்ச்சி:*
சிறியவர்கள் வாரத்தில் இருமுறை இதனைச் செய்து வரலாம்.
*குறிப்பு*
இரண்டு நிமிடத்திற்கு மேல் எண்ணெயை நகத்தில் வைத்திருக்கக் கூடாது.
சளி அல்லது காய்ச்சல் உள்ளவர்கள் இதனைத் தவிர்க்கவும்.
நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற இந்த அற்புதமான மருத்துவத்தை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இதன் தெய்வீக வாசனை உங்கள் மனதிற்கு அமைதியைத் தரும்.
சித்தர்கள் நம்மை வழி நடத்தட்டும்
மேலும் தொடர்ந்து பயணிப்போம்.




