மதிமுக தலைவர் வைகோ, தவெக பக்கம் சென்றபோதே அந்தக் கட்சியின் அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக திமுக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி விமர்சித்துள்ளார்.
வைகோவின் அரசியல் நகர்வுகள் குறித்தும் கருத்து தெரிவித்த லியோனி, தவெக தலைவர் விஜய், வைகோவின் புத்தக வெளியீட்டு விழாவிற்குக்கூட நேரில் செல்லவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இன்னும் மூன்று மாதங்களில் வைகோ தனுஷின் கட்சியில் சென்று அடைக்கலம் தேடுவார் என்றும் லியோனி விமர்சித்துள்ளார். வைகோவின் பேச்சுக்கு தான் நீண்டகாலமாக ரசிகர் என குறிப்பிட்ட அவர், அவரது அரசியல் முடிவுகளையும், அடுத்தடுத்த நகர்வுகளையும் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வைகோவின் பேச்சுத் திறமை மீது தனக்கு மதிப்பு இருந்தாலும், அவரது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்ந்து மாறுவது ஆச்சரியமாக இருப்பதாக திண்டுக்கல் லியோனி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.




