எலும்பு இழப்பு மற்றும் மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளை நீக்கும் திறன் கொண்ட உருண்டை..!!

Oplus_131072

 

எள்ளில் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஒளிந்துள்ளது .அந்த எள்ளை உருண்டையாக சாப்பிட்டால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிட்டும் .இந்த பதிவில் எள் உருண்டை சாப்பிடுவதால் நம் உடலுக்கு உண்டாகும் நன்மைகள் பற்றி நாம் காணலாம்

1.மாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் உருண்டை சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும்.
2.எள் உருண்டையில் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் உள்ளது எனலாம்
3.இளம்வயதினர், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் எள் உருண்டையை தொடர்ந்து உட்கொள்வது அவர்களின் உடலுக்கு மிக சிறந்தது.
4.மேலும் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும் ஆற்றல் கொண்டது .
5.எள்ளில் செம்பு அதிகம் உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது.
6.மேலும் எள்ளுருண்டை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் எள் உருண்டையை தொடர்ந்து மூலம் போக்க முடியும்.
7.சிலர் ஆஸ்துமாவாவினால் அவதிப்படுபவர்.அவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.
8.உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் எள்ளு உருண்டையை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும்.
9.உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.
10. படபடப்பு தன்மை மிகுந்தவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும்.

Read Previous

இரவில் தூக்கமே இல்லையா..? அப்படினா கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

விளக்கெண்ணெய் வீட்டில் இருப்பது வைத்தியர் இருப்பதற்கு சமமாம்.. ஏன் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular