சர்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய்க்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏலக்காய் ஏற்றுமதி மதிப்பு ₹1,253 கோடியிலிருந்து ₹4,149 கோடியாக மும்மடங்கு உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
மேலும், சீனா, கனடா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தரம் மற்றும் நறுமணம் மிக்க இந்திய ஏலக்காயை அதிகளவில் இறக்குமதி செய்து வருவதால், ஏற்றுமதி அளவு 16,399 டன்னாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, உள்நாட்டு சந்தையிலும் ஒரு கிலோ ஏலக்காயின் விலை ₹2,470 வரை உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி, இந்திய விவசாயிகள் மற்றும் மசாலா ஏற்றுமதித் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை வழங்கியுள்ளது.




