‘ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வர வேண்டும்’ என்ற புகழ்பெற்ற பக்திப் பாடலின் வரிகளை எழுதிய பாடலாசிரியர் கிருதியா நேற்று காலமானார்.
கிராமங்களில் இன்றளவும் விடியற்காலையில் ஒலிக்கும் இந்தப் பாடல் மூலம் பரவலாக அறியப்பட்ட அவர், ‘துள்ளித்திரிந்த காலம்’, ‘பரமசிவன்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.
கிருதியாவுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைப்படத் துறையினரும், ரசிகர்களும், பொதுமக்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




