கும்மிடிப்பூண்டி தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜயகுமாரின் மனைவி ஷர்மிளா (45) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஷர்மிளாவின் திடீர் மறைவு தவெக கட்சியினர், ஆதரவாளர்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




