செட்டிநாடு சிக்கன் குழம்பு செய்வது எப்படி..??

Oplus_131072

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1 கிலோ
பெரிய வெங்காயம் – 2
அரைக்க :
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 15 பல்
கிராம்பு – 3
வறுத்து பொடியாக அரைக்க :
சோம்பு – 2 ஸ்பூன்
சீரகம் – 3 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்

குறிப்பு:
கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி பின் அதில் சோம்பு போட்டு வறுத்து அதன் பின் சீரகம், மிளகு போட்டு கருக விடாமல் வறுக்கவும்.பின் அதை ஆற விட்டு மிக்சியில் உலர அரைத்து வைத்துக்கொள்ளவும்.

தாளிக்க:
எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு
பட்டை
கிராம்பு
கல்பாசி
அன்னாசி பூ
பொடி வகைகள்:
மிளகாய் பொடி – 3 தேக்கரண்டி
சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. சிக்கனை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் பொடியாக நறுக்கிய பெரியவெங்காயத்தையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
3.அதன் பின்பு அரிந்து வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு ,கிராம்பு கலவையை போட்டு வதக்கவும்.
4.பின் வறுத்து பொடியாக வைத்துள்ள சீரகம்,சோம்பு,மிளகு கலவையையும்
போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
5.அதன் பிறகு சிக்கனை போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
6.மேலே கூறிய பொடி வகைகளையும் போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
7.சிக்கன் முக்கால் பதம் வெந்தவுடன் உப்பு போடவும்.
8.சிக்கன் வெந்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விட்டு பின் கிரேவி பதம் வந்தவுடன் இறக்கவும்

சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு தயார்.

Read Previous

ஈஸியான முறையில் பட்டர் நாண் செய்ய..!! இந்தப் பதிவை படிங்க..!!

Read Next

பித்தப்பை பிரச்சனையை முன்கூட்டியே காட்டும் அறிகுறிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular