ஒரு மனைவி தன் கணவரிடம் காண்பிக்காத ஒன்று என்ன?.. உண்மையான வரிகள்?.. சொல்லுங்க..!!

ஒரு மனைவி தன் கணவரிடம் காண்பிக்காத ஒன்று என்ன?
வலி என்று தான் நினைக்கிறேன். அது உடல் வலியாகவும் இருக்கலாம் அல்லது மனவலியாகவும் இருக்கலாம்.
திருமணம் முடிந்து தன் வீடு துறந்து புகுந்த வீடு செல்லும் போது கட்டாயமாக வலிக்கும். அதையெல்லாம் மறைத்து கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்குகிறாள் ஒவ்வொரு மனைவியும்.
புதிய வீட்டில் பல சந்தர்ப்பங்களில் வலி மிகுந்த வார்த்தைகளை எதிர்கொள்ள நேரிடும் போது, கணவரிடம் காண்பிக்காமல் ஒரு புன்னகையுடன் கடந்து விடும் மனைவிகள் பலர் உள்ளனர்.
இல்லற வாழ்க்கையின் ஆரம்ப வலி முதற்கொண்டு குழந்தை பெற்றெடுக்கும் வரை எத்தனை உடல் உபாதைகளைத் தாங்குகிறாள் ஒரு மனைவி? எல்லாவற்றையும் கணவனிடத்தில் காண்பிப்பாள் எனக் கூற முடியாது.
அப்போதுதான் பிறந்த தன் குழந்தையைப் பார்க்கும் கணவன் உடனே தன் மனைவியைப் பார்த்துக் கேட்பது , “ரொம்ப வலிச்சுதா” என்பதுதான். ஒரு சோர்வான புன்னகையுடன் அழகாக சிரிக்கும் மனைவி வலியை மறைக்கத்தானே செய்கிறாள்..

Read Previous

டாபர்மேன் நாய்களின் வால்கள் ஏன் வெட்டப்படுகிறது தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Read Next

பொடுகு தொல்லை பிரச்சனையா?.. ஒரே வாரத்தில் இலகுவாக போக்கும் வழிகள் சில..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular