சென்னையில் தங்கம் விலை நேற்று (ஆக.25) கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9.305-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 74,440-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 131 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று (ஆக.26) தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,840க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.9,355க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.130க்கு விற்கப்படுகிறது.




